டீமேட் கணக்கு என்றால் என்ன?

 What is Demat Account(டிமேட் அக்கவுண்ட்)

டீமேட் கணக்கு என்பது வங்கி சேமிப்பு கணக்கைப் போன்றதாகும், அதாவது பங்கு சந்தையில் நீங்கள் வாங்கும் மற்றும் விற்கும் பங்குகளின் இருப்பிடம் ஆகும், அதாவது நீங்கள் இந்தியா அரசு அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்டாக் ப்ரோகேரிடம் மட்டும் தான் டீமேட் கணக்கு தொடங்க முடியும், மேலும் நீங்கள் டீமேட் கணக்கு தொடங்கிய பிறகு நீங்கள் முதலீடு செய்யும் பங்குகளை அந்தத் தரகர்களிடம் இருக்கும் உங்களது டீமேட் கணக்கில் சேமித்து வைக்கப்படும். நீங்கள் வாங்க அல்லது விற்க நினைக்கும் பங்குகளின் விலைகளுக்கேற்ப நீங்கள் உங்களது டீமேட் கணக்கில் டெபாசிட் செய்வது அவசியமாகும்.

டீமேட் கணக்கு என்றால் என்ன?

நீங்கள் சரியான ஸ்டாக் ப்ரோக்கரிடம் கணக்கு தொடங்குவது அவசியம், ஏனென்றால் தங்களது வாடிக்கையாளர்களின் நலன் கருதி ஒரு சில சிறந்த தரகர்கள் சலுகைகள் மற்றும் குறைவான கட்டணம் வசூலிக்கின்றார்கள், எனவே நீங்கள் வர்த்தகம் செய்வது என்று  வந்து விட்டால் முதலில் சரியான தரகரைத் தேர்வு செய்து டீமேட் கணக்கு தொடங்க வேண்டும்.

இந்தியாவில் டீமேட் கணக்கு:

இந்தியாவில் உள்ள வர்த்தக மையங்களில் நீங்கள் பங்குகளை வாங்கவும் மற்றும் விற்கவும் முதலில் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும். டீமேட் கணக்கை Dematerialisation என்றும் கூறலாம், Dematerialisation என்பது எழுத்துப்பூர்வ வடிவத்திலிருந்து மின்னணு தகவல்களை முதலீட்டாளர்க்கு கொடுக்கக்கூடியது ஆகும். இதன் மூலம் நீங்கள் உலகில் என்கிறந்தாலும் உ நிகழாது ஸ்டாக் புரோக்கர் பயன்பாட்டைத் திறந்து அதன் மூலம் உங்களின் சேமிப்பு பங்குகளின் நிலைமையைக் கண்காணித்து கொள்ள முடியும்.

Stock Broker என்பவர் முதலீட்டாளருக்கும் வணிகர்களுக்கும் இடையே செயல்படுபவர் என்று கூறலாம். பங்கு சந்தையில் நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்றால், நேரடியாக அந்த நிறுவனத்தில் வாங்க முடியாது, இதற்காகச் செயல்படுபவர்கள்தான் இந்த ஸ்டாக் ப்ரோக்கேர்ஸ்.

NSDL அல்லது CDSL மூலம் பதிவு பெற்றுள்ள தராகரிடம் மட்டும்தான் டீமேட் கணக்கு தொடங்க வேண்டும்.

டிமேட் கணக்கை எவ்வாறு திறப்பது?

Depository Participant தேர்வு செய்தல்

இந்தியாவில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு முன்பு சரியான Depository Participant(DP) தேர்வு செய்வது அவசியம். Depository Participant என்பது நீங்கள் வாங்கி விற்கும் பங்குகளின் பரிவர்த்தனை மற்றும் சேமிப்பு இடமாகும், இந்தச் சேவையை இந்தியாவில் உள்ள வங்கிகள் மற்றும் ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் கொடுக்கிறார்கள், அதுமட்டும் இல்லாமல் ஒரு சில ஆன்லைன் முதலீட்டு நிறுவனங்களும் இந்தச் சேவையைக் கொடுக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பங்குத் தரகர்கள் அல்லது ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் என்று கூறுவதுண்டு. இவர்களைத் தேர்வு செய்யும் முன் இவர்கள் வழங்கு சேவைகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்குமாறு பார்க்க வேண்டும். DP-யை தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ளவேண்டியது.

 • குறைவன தரகு
 • குறைவான பரிவர்த்தனை கட்டணம்
 • உங்கள் மொழியில்  உதவிகள் கிடைக்குமா என்பது.
 • ஒரு கணக்கில் பல வர்த்தகம் கிடைக்குமா?(share trading, currency trading, commodatty trading)
 • உள்ளூர் கிளைகள் இருக்கிறதா?
 • வர்த்தகம் செய்யும் தளங்கள் ஏற்றதாக இருப்பது.

Open Demat Account

உங்களுக்கான Depository Participant தேர்வு செய்தவுடன் அவர்களின் வலைத்தளத்தில் கணக்கு தீர்ப்பதற்கான வழிமுறைகளை நீங்கள் செய்ய வேண்டும். ஒரு சில தரகர்கள் டிரேடிங் கணக்கு மற்றும் டீமேட் கணக்கு ஆகிய இரண்டினையும் இலவசமாகக் கொடுப்பதுண்டு. உங்களுக்கு விருப்பம் என்றால் Upstox நிறுவனத்தில் கணக்கைத் திறக்கலாம். நீங்கள் இவர்களின் தலத்தில் open demat account என்பதனை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் மூலமாக அனைத்தையும் செய்து முடிக்கலாம்.

KYC Verification

அடுத்ததாக உங்களது சுயவிபரங்களை சமர்ப்பித்து உங்களுக்கான KYC Verification செய்வது கட்டாயமாகவும், நீங்கள் எந்த ஒரு தராகரிடம் கணக்கு தொடங்கினாலும், முதலில் செய்வது இந்த KYC Verification ஆகும், இதற்க்கு உங்களது வங்கி கணக்குப் புத்தகம், அடையாள அட்டைகள், நீங்கள் கையெழுத்திட்ட ஸ்கேன் செய்த புகைப்படம் ஆகியவைகள் கட்டாயம் தேவைப்படும். இவற்றை நீங்கள் சமர்பித்துவிட்டால் ஒரு வாரத்திற்குள் உங்களது டீமேட் கணக்கு வெற்றிகரமாகத் திறக்கப்பட்டு நீங்கள் வர்த்தகம் செய்யத் தயாராகலாம்.

டிமேட் கணக்கைத் திறக்கத் தேவையான ஆவணங்கள்:

1.அடையாளச் சான்று: 

உங்கள் புகைப்படத்துடன் உங்கள் பான் அட்டையின் நகல்

2.முகவரி ஆதாரம்: 

பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் இருக்கும்

உங்கள் குடியிருப்புக்கான ஆதாரம்.

 • வாக்காளரின் அடையாள அட்டை
 • பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்
 • ஓட்டுநர் உரிமம்
 • கடவுச்சீட்டு
 • ஆதார் அட்டை
 • லேண்ட்லைன் தொலைபேசி பில்
 • மின் ரசீது
 • அபார்ட்மெண்ட் பராமரிப்பு பில்
 • உங்கள் காப்பீட்டின் நகல்
 • ரேஷன் கார்டு
 • எரிவாயு பில்

வங்கி பாஸ் புக் அல்லது கணக்கு அறிக்கை (ஆவணங்கள் கிடைத்த நாளிலிருந்து 3 மாதங்களுக்கு மேல் இல்லை)

3.வங்கி கணக்கு ஆதாரம்: 

உங்கள் வங்கி கணக்கு கடவுச்சொல் அல்லது வங்கி அறிக்கையின் நகல் (3 மாதங்களுக்கு மேல் இல்லை)

4.உங்கள் வருமானத்தின் சான்று: 

உங்கள் சமீபத்திய சம்பள சீட்டுகளின் நகல் அல்லது உங்கள் வருமான வரி வருமானம் (நாணயம் மற்றும் வழித்தோன்றல் பிரிவுக்குக் கட்டாயமானது)

நீங்கள் வெற்றிகரமா டீமேட் கணக்கு திறக்க Alice Blue என்ற முன்னணி ஸ்டாக் ப்ரோக்கரிடம் செல்லுங்கள். பங்கு வர்த்தகம் சந்தை அபாயங்களை உட்பட்டது. 

Post a Comment (0)
Previous Post Next Post