மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) என்றால் என்ன?

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) என்றால் என்ன? என்று பார்ப்பதற்கு முன்பு சென்ற பதிவில் தேசிய பங்குச் சந்தை NSE பற்றிப் பார்த்தோம் என்பதை நினைவுகூருகிறோம். BSE என்பதும் ஒருவகையான ஸ்டாக் Exchange ஆகும். இந்தியாவில் உள்ள இரண்டாவது முக்கிய வர்த்தக மையமாகத் திகழ்கின்றது, மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) பற்றி இந்தப் பதிவுகள் தெளிவாகப் பார்க்கலாம்.

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ):

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) என்றால் என்ன?

  மும்பை பங்குச் சந்தை ஆனாது இந்தியாவில் முதன் முதலில் பங்கு வர்த்தகம் செய்வதற்கு எனச் சிறய அளவில் தொடங்கப்பட்டு தற்போது உலகத்தரத்தில் நிலைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. NSE-யை ஒப்பிடும்போது மிகப் பழமையானது என்றாலும் இது தற்போது இந்திய அளவில் இரண்டாவது இடத்தில தான் இருக்கிறது. BSE தொடங்கப்பட்ட பிறகு பல ஆண்டு காலத்திற்கு பிறகுதான் NSE தொடங்கப்பட்டது, இருந்தாலும் NSE ஆனாது BSE-யை விடத் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்று அதிக வாடிக்கையாளர்களுடன் முதல் இடத்தில இருக்க்கிறது.

1875ஆம் ஆண்டு Native Share and Stock Brokers’ Association எனத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, BSE இந்தியாவின் முதல் மற்றும் largest securities சந்தையாகும். இந்தியாவின் மும்பை நகரை தலைமை இடமாகக் கொண்டு(தலால் தெருவில்) மும்பை பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தை கிட்டத்தட்ட 6000 மேற்பட்ட நிறுவனங்களைப் ஸ்டாக் மார்க்கெட்டில் பட்டியலிட்டு உலக வர்த்தகமயத்திற்கு இணையாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியது இந்த மும்பை பங்குச் சந்தை ஆகும், இது ஆசியாவில் முதல் பங்கு சந்தையாகும். மேலும் இந்தியாவில் capital markets உருவாக்க உதவியது. 

மும்பை பங்குச் சந்தை வளர்ச்சி:

மும்பை பங்குச் சந்தை தொடங்கிய காலகட்டத்திலிருந்து பல வருடங்களாகக் காகித வர்த்தகத்தை மட்டும் முன்னிறுத்திய BSE, 1995 ஆம் ஆண்டுக்குப் பின் மின்னணு வர்த்தக முறைக்குத் தங்களை மாற்றி உலக வர்த்தக மையத்திற்கு இணையாக வளர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

NSE போலவே BSE இந்தியாவின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் 12 முக்கிய துறைகளிலிருந்து 30 நிறுவனங்களின் பங்குகளைச் சேர்த்து Sensex என்ற குறியீட்டை உருவாக்கி உள்ளது. அந்த 30 நிறுவங்களின் வர்த்தக மாற்றங்களுக்கு ஏற்ப Sensex வர்த்தகம் இருக்கும். nifty குறியீடு உருவாக்குவதற்கு முன்பே Sensex உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு Sensex அறிமுகம் செய்யப்பட்டது இதனை BSE30 என்றும் கூறலாம்.

Post a Comment (0)
Previous Post Next Post