பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்:

 பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்:

  பங்குசந்தை என்பது ஒரு நாளில் பலகோடி பரிவர்த்தனை செய்யும் இடமாகும், இங்கு நீங்கள் ஒரு சிறு துளி மட்டும்தான். பங்கு சந்தையில் முதலீடு செய்து வெற்றிபெற வேண்டும் என்றால்  நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். ஏனெற்றால் இது வானிலை மாற்றத்தைப் போல அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும், இதற்கான முன்னறிவுப்புகள் நமக்கு வந்து சேருவதற்கு முன்பே என்னன்னவோ நடந்து முடிந்திருக்கவும் கூடும். பங்குசந்தை வர்த்தகத்தில் நூறுரூபாய் முதலீடு செய்யும் எறும்பும் இருக்கும், அதேசமயம் நூறு கோடி முதலீடு செய்யும் திமிங்கலமும் இருக்கும், வர்த்தக மாற்றங்கள் எப்பொழுதும் பெரிய பரிவர்தனைகளின் முடிவுகளைப் பொறுத்தே மாறுபடும். இதில் நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் லாபம் சம்பாதிக்கவேண்டுமெனில் கீழ்க்கண்டவற்றில் கவனமாக இருக்கவும்.

பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்:

BigBull(பெரிய காளை):

ஆன்லைன் வர்த்தகம் வருவதற்கு முன்பு பங்கு சந்தையில் BigBull(பெரிய காளைகள்) என்று சொல்லக்கூடிய ஒரு சில பெரிய பண முதலைகள் இருந்தது. அவர்கள் ஒரு சில சிறிய அல்லது விலை குறைந்த பங்குகளைக் குறிவித்தனர், பின்பு அந்த நிறுவனங்கள்பற்றிய கருத்துக்களை செய்தி வாயிலாகவும் மற்றும் மறைமுகமாகவும் புரளிகள் மூலம் பரப்பினார்கள், இதன் மூலம் மூன்று நாட்களிலிருந்து ஆறு மாத காலங்களில் அந்த நிறுவங்களின் பங்குகளின் விலை மூன்று மடங்கிற்கும் மேல் உயர்ந்தது. விலை குறைவாக இருக்கும் பொது அவர்கள் ஒரு பெரிய தொகையை அந்த நிறுவனங்களின் முதலீடு செய்தார்கள், அதே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான சிறிய எறும்பு கூட்டமும் அந்தப் புரளியை நம்பி அவர்களால் முடிந்த முதலீட்டைச் செய்தார்கள். BigBull என்று சொல்லக்கூடியவர்கள் அவர்களின் முதலீட்டை விற்க தொடங்கினார்கள், இதனால் அடுத்தடுத்த பங்குகளின் விலைகள் இறங்க தொடங்கியவுடன் சிறிய முதலீட்டாளர்கள் பெரும் இழப்பைச் சந்திக்க நேர்ந்தது.

BigBull போலவே பங்குகளைப் போலி செய்திகள் மற்றும் வநதிகள் மூலமும் விலையைக் குறைத்து பிறகு அதில், முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களும் இருக்கிறர்கள். இன்றைய காலக்கட்டத்தில் போலி செய்திகள் மற்றும் வாதிகள் வருவதை அரசு கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக உதவி நிறுவனங்கள்:

பங்கு சந்தியில் எவ்வாறு வர்த்தகம் தொடங்குவது என்று இருப்பவர்கள் மத்தியில் அவர்களைப் பயன்படுத்தி லாபம் அடையும் நிறுவங்களும் ஏராளாமாக இருக்கத்தான் செய்கிறது. பங்குச் சந்தைக்கு நீங்கள் புதியவர்கள் எனில் வர்த்தகம் தொடங்கும் முன் இதையும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பங்கு சந்தையைப் பற்றிப் பகுப்பாய்வுகள்(Analysis) செய்து Forecasting செய்தும் மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு Call கொடுத்தும் சம்பாதிப்பார்கள், இவர்களை நாம் குத்தம் சொல்ல முடியாது, ஏனென்றால் இவர்கள் பங்கு சாந்தியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து சிறந்த முறையில் எந்தப் பங்கனை வாங்கலாம் அல்லது விற்கலாம் அன்று அறிவுரை கூறுவார்கள். ஆனால் இதேபாணியில் சில போலி நிறுவங்களும் இருக்கிறது அவர்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் முடிந்த அளவிற்கு நீங்கள் சொந்தமாகப் பகுப்பாய்வு செய்ய முயற்சிக்க வேண்டும்.

Options & Futures

பங்கு வர்த்தகம் செய்யும்போது பேராசை மற்றும் மனக்கட்டுப்பாடு போன்றவற்றால் நாம் நஷ்டம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. குறைவான நிறத்தில் அதிக லாபம் கொடுக்கக் கூடியது Option Trading ஆனால் இதில் அதிக நஷ்டம் அடைந்தவர்கள் ஏராளம். இது குறைவான நேரத்தில் லாபத்தை மட்டும் கொடுக்காது, நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பெரும் இழப்பை ஏற்படத்தவும் கூடும். நீங்கள் முதலில் குறைவான ரிஸ்க் இருக்கும் முறையை மட்டும் கையாளுவது சிறந்ததாக இருக்கும்.

முக்கியமான வர்த்தக முறைகள்.

தினசரி வர்த்தகத்தில், காலை வர்த்தகம் தொடங்கிய 5 முதல் 30 நிமிடத்திற்குள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதை விற்று லாபம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் இந்தவகை வர்த்தகத்திற்கு ஸ்கேல்பிங் டிரேடிங் என்று பெயர். இதில் அதிவேகமாகச் செயல்படுபவர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். இதற்க்கு அதிவேக இணையவசதி மற்றும் வர்த்தக பயன்பாடுகளை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் வெற்றிபெறுவார்கள்.

ஒரு சிலர் காலையில் ஒரு பங்கில் முதலீடு செய்து மாலையில் முடித்துவிடுவார்கள், இதற்க்கு அந்த நிறுவனத்தைப் பற்றிய அன்றாட தகவல்கள் மற்றும் பகுப்பாய்வின் மூலம் அதை அவர்கள் சாத்தியமாக்குவார்கள். இந்த வகை வர்த்தகத்திற்கு Intraday Trading என்று பெயர்.

ஒரு நிறுவனத்தின் பகுப்பாய்வுகள் அடிப்படையில் இன்று முதலீடு செய்து அடுத்த நாள் அல்லது அடுத்த வாரம் வரி பொறுத்திருந்து வர்த்தகத்தை முடிப்பவர்களும் இருக்கிறாள், நாம் பார்த்த இந்த மூன்றிலும் லாபம் அதிகமாக இருந்தாலும் மிக ஆபத்தானதாகும். நீங்கள் நீண்டகால முதலீடு செய்வதன் மூலம் குறைவான ரிஸ்க் கொண்டு பாதுகாப்பான வர்த்தகத்தைச் செய்யலாம்.

Post a Comment (0)
Previous Post Next Post