தங்க பத்திர முதலீடு நாளை தொடக்கம். தங்க பத்திரம் முதலீடு பாதுகாப்பானதா?

 இந்தியாவைப் பொருத்தவரையில் தங்கத்தை வாங்குவதும் விற்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாகத் தங்க பத்திரங்களை வாங்குவது விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் தங்கத்தில் முதலீடு செய்வது முன்பு இருந்ததை விடத் தற்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஏனென்றால் தங்கத்தை RBI வெளியீடு செய்கிறது, இதனால்  இது ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்களிடையே நம்பப்படுகிறது.

தங்க பத்திர முதலீடு நாளை தொடக்கம். தங்க பத்திரம் முதலீடு பாதுகாப்பானதா?

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு சில முதலீடுகள் தோல்வி அடைந்து இருக்கிறது. ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வது மட்டும் நின்றபாடில்லை. என்றால் நீங்கள் நேரடியாக ஒரு தங்கத்தை கடையில் வாங்கும்பொழுது அதற்குச் செய்கூலி சேதாரம் என்று பலதரப்பட்ட அம்சங்களைக் கொடுத்து, அதற்காக அதிகமாகச் செலவு செய்ய வைப்பார்கள். ஆனால் நீங்கள் பத்திர வடிவிலான தங்க நகை வாங்கும்போது அது பாதுகாப்பானதாகவும், அதுமட்டுமல்லாமல் செய்கூலி சேதாரம் இல்லாமல் நியாயமான விலைகளில் உங்களுக்குக் கிடைக்கும்.

RBI தங்க பத்திர திட்டம்:

RBI ஆனது சாதாரண மக்களும் தங்கத்தில் முதலீடு செய்யும் வகையில் தங்க பத்திர திட்டத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரு சில மாதங்களாகத் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நிபுணர்கள் மேலும் தங்கத்தின் விலை உயரக்கூடும் என்று கூறிவருகிறார்கள். இந்த நிலையில் நிபுணர்களின் கணிப்பு நீண்ட கால முதலீட்டிற்கு தங்க பத்திரங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பாகவும் மற்றும் லாபம் கொடுக்கக்கூடிய முதலீடாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கக் கட்டிகள்:

முன்பெல்லாம் தங்கத்திற்கான மோகங்கள் அதிகரித்திருந்தன, அந்த நிலையில் அனைவரும் தங்க நகைகாளாகவோ அல்லது தங்க கட்டிகளாகவோ அதிகம் வாங்கி வீட்டில் அல்லது வங்கிகளில் வைத்திருந்தனர். ஆனால் RBI தங்க பத்திர திட்டத்தின் மூலம் நீங்கள் காகித வடிவிலான தங்கத்தை வாங்கிக் கொள்ள முடியும். அதாவது உங்களுக்குத் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் இருந்தால் உங்களது பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யக்கூடிய முதலீட்டிற்கு ஏற்பப் பத்திரங்கள் உங்களுக்குக் கொடுத்து விடுவார்கள்.  தங்க நாணயங்களைவிட இது உங்களுக்குப் பாதுகாப்பான மற்றும் திருட்டு போகாத ஒரு முதலீடாக இருக்கும்.

நாளை விற்பனை தொடக்கம்:

இந்த ஆண்டிற்கான ஆரம்பகட்ட தங்க பத்திர விற்பனை ஆகஸ்ட் 30 அன்று தொடங்க இருக்கிறது. இதற்குக் கடைசி நாள் செப்டம்பர் 3 ஆகும். தங்க பத்திரங்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதாக இருந்தால் உங்களுக்குக் கிராமுக்கு ஐம்பது ரூபாய் சலுகையும் கிடைக்கும். இதனை இந்திய அரசு ஊக்குவிக்கிறது. நாளைய விற்பனையில் கிராமுக்கு 4 ஆயிரத்து 737 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீங்கள் தங்க பத்திரத்தை ஆன்லைன் மூலம் வாங்கும்பொழுது 50 ரூபாய் தள்ளுபடியில் 4682 ரூபாய்க்கு கிடைக்கும்.

தங்க பத்திரம் எங்குக் கிடைக்கும்:

நீங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்பவராக இருந்தால், இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியம் NSE மற்றும் BSE ஆகியவற்றில் கிடைக்கும். அல்லது வங்கிகள் அஞ்சல் அலுவலகங்கள் போன்றவற்றிலும் நீங்கள் விண்ணப்பம் செலுத்தலாம். நீங்கள் ஒரு தனி நபராக இருக்கும் பட்சத்தில் ஒரு கிராம் முதல் 4000 கிராமங்கள்வரை முதலீடு செய்து கொள்ள முடியும். அதுவே நீங்கள் ஒரு நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் 20 கிலோகிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். நீங்கள் முதலீடு செய்த தங்க பத்திரங்களை எட்டு ஆண்டுகள்வரை விற்காமல் வைத்திருக்க முடியும். ஆனால் நீங்கள் முதலீடு செய்த காலத்திலிருந்து அடுத்த 5 ஆண்டுகள் முடிந்த உடன் நீங்கள் விருப்பப்பட்டால் அவற்றை விற்க முடியும்.

இது பாதுகாப்பானதா:

தங்க பத்திரங்களை வெளியிடுவது இந்திய அரசு என்பதனால் இது மிகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. மேலும் ஆண்டுக்கு 2.5 சதவிகித வட்டி உங்களுக்குக் கிடைக்கும். இதை உங்களது வருமானமாக எடுத்துக் கொண்டு அதற்காக நீங்கள் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். அதுவே நீங்கள் முதலீடு செய்த காலத்திலிருந்து அந்த முதலீடு முதிர்வடையும் காலம்வரை காத்திருந்தாள் அதாவது 8 ஆண்டுகள்வரை விற்காமல் காத்திருக்கும் பட்சத்தில் உங்களுக்கு எந்த ஒரு வருமான வரியும் இல்லை.

Post a Comment (0)
Previous Post Next Post