Advertisement

IPO என்றால் என்ன?

IPO என்றால் என்ன?

IPO என்பது ஆரம்ப பொது வழங்கல்(Initial Public Offering) எனப்படும். இதன்மூலம் பங்குச்சந்தைகளுக்கு முதன் முதலில் வரும் தனியார் நிறுவனங்களைப் பொது நிறுவனங்கள் ஆக மாற்றும் செயல்முறை நடைபெறுகிறது. நீண்டநாள்(Longterm) முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை ஒப்பிடும்பொழுது இது போன்ற ipo செயல்முறையின் பொழுது மட்டுமே முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இருக்கிறார்கள். இவர்கள் குறுகிய காலத்தில் அதிகமான லாபங்களை எடுக்கின்றார்கள்.

what is ipo?

மற்ற வகையான முதலீடுகளை ஒப்பிடும்பொழுது ipoவில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும், ஏனென்றால் மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபங்களை கொடுக்கக்கூடிய முதலீடாக இது திகழ்கிறது. ஏற்கனவே பங்குச்சந்தைகளில் இருக்கும் பங்குகளைவிட புதிதாகப் பங்குச் சந்தைக்கு நுழையும் ஒரு நிறுவனத்தின் பங்குகள் எந்த ஒரு வர்த்தக அபாயங்களுமின்றி 6 வாரக்கல இடைவெளியில் சிறந்த லாபங்களை கொடுக்கக்கூடும். ஆனால் இவற்றில் இருக்கும் ஆபத்துகளும், அபாயங்களும் முன்கூட்டியே யாராலும் கணிக்க முடியாது. ipo பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்.

IPO பொருள் என்ன?

ஆரம்ப பொது வழங்கல்(IPO) ஒரு தனியார் நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது ஆகும். இது போன்ற செய்வதனால் தனியார் நிறுவனமாக இருந்த அந்த நிறுவனம், பொது நிறுவனமாகத் தரம் உயர்த்தப்படுகிறது. ஒரு ஐபிஓ என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளில் பலதரப்பட்ட மக்களும் முதலீடு செய்வதற்கு அனுமதி கொடுப்பதாகும். அதுமட்டுமில்லாமல் ஆரம்பக்கட்டத்தில் அதிக முதலீட்டை இந்த நிறுவனம் ஈட்டுவதற்காகவும் மற்றும் வருங்காலத்தில் இந்த நிறுவனத்திற்கான முதலீடுகளைத் திரட்டுவதற்கும் இது ஆரம்பக்கட்டமாக அமைகிறது.

IPOவை யாரெல்லாம் வாங்க முடியும்.

உங்களிடம் வங்கி கணக்கு இருந்தால் போதும் எந்த ஒரு நிறுவனத்தின் IPOவையும் வாங்க முடியும். ஐபிஓ காலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் திறந்த சந்தையில் சுதந்திரமாக வர்த்தகம் செய்யப்படும். அதாவது ஐபிஓ காலத்தில் ஒரு குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே வாங்க முடிந்த அந்த நிறுவனத்தின் பங்குகளை, ஐபிஓ காலம் முடிந்த பிறகு டீமேட் கணக்கு வைத்திருக்கும் அனைவராலும் அந்த நிறுவனத்தின் பபங்குகளில் எளிதாக முதலீடு செய்ய முடியும்.

ஓரு நிறுவனம் IPO வெளியிடுவதற்கான காரணம் என்ன?

உங்களிடம் பலகோடி வருமானம் வரும் ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது என்றால், வருங்காலங்களில் உங்களது முதலீட்டை அதிகரிக்கவும் மற்றும் உங்களது முதலீடுகளைப் பணமாக்கவும் நீங்கள் IPOவை வெளியிடலாம். உதாரணமாக ஒரு நிறுவனம் 10 கிளைகளுடன் இயங்கி வருகிறது என்றால்? அவர்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ள மற்றும் ஒரு சில இடங்களில் அவர்களது கிளைகளைத் தொடங்குவதற்காக அவர்கள் ஆயத்தம் செய்து வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இதற்காக அவர்களிடம் பணம் இல்லாவிட்டால் அவர்கள், அவர்களின் நிறுவனங்களில் ஒரு சில பங்குகளை விற்று அல்லது அடமானம் வைத்துத் தனியார் நிறுவனங்களிடம் அல்லது வங்கிகளிடம் கடன் வாங்க கூடும். அதற்குப் பதிலாக அவர்களை IPO வெளியிட்டார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களுக்கு வட்டியில்லா கடன் கிடைக்கும்.

IPOவிற்கு விண்ணப்பிக்கும் முறை 

எந்த ஒரு தனி நபர்களும் அவர்களிடம் இருக்கும் வங்கி மற்றும் வர்த்தக கணக்குமூலம் IPOவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஐபிஓ காலம் முடிந்தவுடன் அவற்றை எங்கள் விற்பதற்கு கண்டிப்பாக உங்களிடம் டீமாட் கணக்கு இருக்க வேண்டும். டீமாட் கணக்கு என்பது உங்களின் பங்குகளின் முழு விவரங்களையும் சேமித்து வைக்கப்படும் ஒரு கணக்கு ஆகும். டீமேட் கணக்கு தொடங்குவது மற்றும் எவ்வாறு சரியான பங்குதாரர்களைக் கண்டுபிடிப்பது என்பதற்கான அனைத்தும் நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

நீங்கள் டீமேட் கணக்கைத் தொடங்குவதற்கு உங்களிடம் PANCARD மற்றும் ஆதார் கார்டு இருந்தால் நீங்கள் ஆன்லைனில் உடனடியாக டீமேட் கணக்கு தொடங்க முடியும். இந்தியாவைப் பொறுத்தவரை நீங்கள் ஐபி வாங்க வேண்டும் என்றால் குறைந்த பட்சமாக உங்களிடம் 15 ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். நிறுவனங்களுக்கு ஏற்றவாறு பங்குகளின் விலைகள் நிர்ணயிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அவைகள் நிலையான விலையில் இருப்பதை அதிகமாகப் பார்க்க முடிகிறது. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட விலையில் IPO வழங்கியவுடன், ஏராளமான நபர்கள் அவற்றை வாங்குவதற்கு விண்ணப்பம் செய்வார்கள். விண்ணப்பம் செய்தவர்களில் அனைவருக்கும் IPO கிடைப்பதில்லை. 

IPO ஒதுக்கீடு 

பங்குச்சந்தைகளில் தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள்(QIB), எந்த ஒரு நிறுவனத்தின் பெயரும் இல்லாமல் அதிக அளவு முதலீடு செய்யும் ஒரு சில நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் சில்லரை வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள் என்று மூன்று வகையான முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். ஐபிஓ வழங்கும் காலங்களில் மேலே கூறியிருக்கும் அந்த மூன்று முதலீட்டாளர்களுக்குத் தகுந்தவாறு பதிவுகளின் எண்ணிக்கையைப் பிரிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் சில்லரை வர்த்தகர்கள் ஆகிய தனி நபர்கள் அனைவரும் ஐபிஓ வழங்கலில் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறார்கள். முதல் இரண்டு வகையான முதலீட்டாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது போக மூன்றாவதாகத் தனிநபர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்படும்.

நாம் ஏற்கனவே கூறியிருக்கும் படி ஒரு தனிநபர் ஐபிஓ வாங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வைத்திருப்பது அவசியமாகும். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக இரண்டு லட்சம்வரை நீங்கள் பயன்படுத்தலாம். சில்லரை வர்த்தகர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட IPOவிற்கான விண்ணப்பங்களில், குறைவான விண்ணப்பம் மட்டுமே அவர்கள் பெற்றிருக்கும் நிலையில், அவற்றில் நீங்கள் அதிகமான IPOவிற்கு நீங்கள் விண்ணப்பம் செய்து இருந்தால் உங்களுக்கு அதிகமான ஐபிஓ கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

செபி ஒப்புதல்:

இந்தியாவில் இருக்கும் எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் ஐபிஓ வழங்குவதில் செபி ஒப்புதல் என்பது கட்டாயம் இருக்க வேண்டும். தங்களின் முதலீட்டை ஈட்டுவதற்காக வரும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் முதலில் செபியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு மட்டும்தான் ஐபிஓ வழங்க முடியும். எந்த ஒரு தனியார் நிறுவனமாக இருந்தாலும் செபி உடன் ஒப்புதல் பெறுவதற்கு முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும். அதாவது IPO  கொடுப்பதற்கு என்று ஒரு வழிகாட்டு நெறிமுறை இருக்கிறது அவற்றை அவர்கள் பின்பற்ற வேண்டும். எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவரால் தொடர்ந்து மூன்று கால் ஆண்டுகள் அல்லது இரண்டு அரை ஆண்டுகளில் அவர்களின் நிறுவனம் ஈட்டி இருக்கும் வருவாய் அதிகரித்திருக்க வேண்டும். தொடர்ந்து அவர்களின் நிறுவனம் மக்களிடம் நல்ல மதிப்பினை பெற்றிருக்க வேண்டும். மூன்று முதல் 5 ஆண்டுகள் அவர்களது நிறுவனத்திற்கு வயதாகியிருக்க வேண்டும். இது போன்று பல காரணங்களை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

Post a Comment

0 Comments