கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு | ஈக்விடாஸ் சிறிய நிதி வங்கியுடன் புதிய சேவைகள் தொடக்கம்

 கூகுள் நிறுவனத்தில் திடீர் முடிவின் காரணமாக இந்தியாவில் இருக்கும் வங்கிகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சலுகையாக அமையப் போவதும் இந்தக் கூகுளின் அறிவிப்பில் அடங்கியிருக்கிறது. அவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கூகுள் நிறுவனமானது ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதில் இந்தியாவில் முதல் இரண்டு இடத்திற்குள் இருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில் ஈக்விடாஸ் சிறிய நிதி வங்கியுடன்(Equitas Small Finance Bank) இணைந்து பிக்ஸட் டெபாசிட் முறையினை அறிமுகம் செய்ய இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட இவர்கள் அதிகமாகக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்கனவே சில வங்கிகளில் பிக்சட் டெபாசிட் செய்த உள்ளவர்களும் கூகுள் நிறுவனத்தின் மூலம் மிக எளிதாகப் பிக்சட்  டெபாசிட் செய்து கொள்ள முடியும்.

GPay:

GPay அல்லது Google Pay என்று அழைக்கக்கூடிய App மூலம் கூகுள் நிறுவனமானது மொபைல் ரீசார்ஜ், பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை இந்தியாவில் வெற்றிகரமாகச் செய்து வருகிறது. இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனையைப் பயன்படுத்துபவர்களில் 20 வயது முதல் 40 வயது வரை இருப்பவர்கள் மட்டுமே 60 சதவீதத்தினர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கூகுள் நிறுவனம் கூறியிருக்கும் இந்தப் பிக்ஸட் டெபாசிட் முறையினை அறிமுகம் செய்து விட்டால், அவர்களின் வங்கியில் வைத்திருக்கும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பது நிச்சயம். அது மட்டுமில்லாமல் மற்ற வங்கிகளைக் காட்டிலும் இவர்கள் அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி இருக்கும் காரணத்தினால், இது இந்தியாவில் இருக்கும் வங்கிகளுக்குக் கொஞ்சம் சிக்கலாக அமைகிறது.

Fixed Deposit:

உங்களது சேமிப்பு வங்கிக் கணக்கில்(Saving Bank Account) நீங்கள் டெபாசிட் செய்து வைத்திருக்கும் பணத்திற்கு ஆண்டுதோறும் ஒரு சிறிய வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிகளும் கொடுப்பதுண்டு. அதை வங்கிகளில் சேமிப்பு கணக்கு பதிலாக நீங்கள் நிலையான வைப்பு(Fixed Deposit) கணக்கினைத் தொடங்கி, உங்கள் செலவு போக மீதமுள்ள பணத்தை இந்தக் கணக்கில் போட்டுவைத்திருந்தால் இரண்டு முதல் 5 சதவிகித வட்டி ஆண்டுதோறும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த வட்டி விகிதமானது நீங்கள் பயன்படுத்தும் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும். இதே முறையைத் தற்போது கூகுள் நிறுவனமானது அறிமுகம் செய்துள்ளது. ஆனால் நிறுவனத்திடம் வங்கி சேவைகள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவர்கள் இந்தியாவில் இயங்கி வரும் ஈக்விடாஸ் சிறிய நிதி வங்கியுடன்(Equitas Small Finance Bank) இணைந்து பிக்ஸட் டெபாசிட் முறையினை அறிமுகம் செய்ய இருக்கிறது. அத்துடன் இந்தியாவில் இருக்கும் வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட இவர்கள் அதிகமான வட்டியை கொடுப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Equitas Small Finance Bank

ஈக்விடாஸ் சிறிய நிதி வங்கி ஆனது தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியானது 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வங்கியின் அதிகப்படியான கிளைகள் அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறது. இந்த வழங்கியது சேமிப்பு கணக்கு மற்றும் Fixed Deposit கணக்கினை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் பலவகையான கடன் கொடுக்கும் திட்டத்தினையும் வைத்திருக்கிறார்கள். 

இந்த வங்கியானது நியோ எக்ஸ் நிறுவனத்துடன் இணைத்து 2 இன் 1 பவர் பேக் செய்யப்பட்ட கணக்குகளை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. நியோ எக்ஸ் நிறுவனத்துடன் அறிமுகம் செய்துள்ள இந்தக் கணக்கினை நீங்கள் தொடங்கும்பொழுது உங்களுக்கு, உங்களது பணத்தை சேமித்து வைப்பதற்கான வங்கிக் கணக்கும் மற்றும் நீங்கள் முதலீடு செய்வதற்கான ஒரு செல்வ கணக்கும் உங்களுக்குக் கொடுக்கிறார்கள். உங்களது சேமிப்பு கணக்குமூலம் நீங்கள் மற்ற வங்கிகளில் டெபாசிட் மாற்றும் பணம்திரும்ப பெறுதல்(Withdraw) செய்வதை போன்று, இங்கேயும் செய்துகொள்ள முடியும். இந்தக் கணக்கினை பயன்படுத்தி நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்ள முடியும்.

அதுமட்டுமில்லாமல் இந்த வகை வங்கி கணக்கு தொடங்கும்பொழுது இலவசமாகச் செய்துவிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஒரு சில வழிகளில் நீங்கள் 500 முதல் 1000 ரூ வைப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும், இல்லை என்றால் உங்களுக்கு அதற்கான கட்டணங்களை அந்த வங்கி சார்பில் வசூலிக்கலாம். ஆனால் எந்த வகையில் நீங்கள் சேமிப்பு கணக்கு தொடங்கும்பொழுது நீங்கள் எந்த ஊரு வைப்புத் தொகையும் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது ஒரு Zero Balance Account ஆகும்.

KYC:

நீங்கள் நியோ எக்ஸ் நிறுவனத்துடன் இணைத்து 2 இன் 1 சேமிப்பு கணக்கு தொடங்குவதாக இருந்தாலும் அல்லது ஈக்விடாஸ் சிறிய நிதி வங்கியின்  நேரடியான சேமிப்பு கணக்கைத் தொடங்குவதாக இருந்தாலும் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஐந்து நிமிடத்திற்குள் தொடங்கிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் இவற்றில் நீங்கள் எந்த வகையான கணக்கு வைத்திருந்தாலும் இலவசமாக நிலையான வைப்பு(Fixed Deposit) கணக்கினை நீங்கள் செயல்படுத்தி கொள்ள முடியும். 

கூகுள் நிறுவனத்தின் ஒரு வருட வைப்பு நிதி சேவை:

Gpay மூலமாகத் தற்போது வரும் இந்த நிலையான வைப்புத் தொகை சேவைமூலம் நீங்கள் எந்த ஒரு வங்கியைப் பயன்படுத்தினாலும். மிக எளிமையான முறையில் பிக்சட் டெபாசிட் செய்து கொள்ள முடியும். வேறுசில வங்கிகளைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால், முன்பு கூறியது போல  Zero Balance Account அல்லது 2 இன் 1 கணக்கைத் தொடக்கி கொள்ளலாம்.

மற்ற வங்கிகளுக்கு என்ன ஆபத்து:

இந்தியாவில் இயங்கி வரும் பொது மற்றும் தனியார் வங்கிகளின் ஒரு வருட வைப்பு நிதிக்கு அதிகப்படியாக 5.75 சதவீதம் வட்டி கொடுக்கிறார்கள். ஆனால் தற்போது கூகுள் நிறுவனத்தின் Gpay மூலம் ஈக்விடாஸ் சிறிய நிதி வங்கி இணைந்து ஒரு வருட வைப்பு நிதிக்கு 6.85% வட்டி வருமானத்தை மக்களுக்குக் கொடுக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் மூத்த குடிமக்களுக்கு மேலும் 0.50 சதவீதம் அதிகமான வட்டி வருமானத்தைக் கொடுக்கிறார்கள். மற்ற வங்கிகளைவிட இவர்கள் அதிகமாக வட்டி கொடுக்கும் காரணங்களால், இந்தச் சேவையைப் புதிய பயனாளர்கள் பலரும் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மற்ற வங்கிகளில் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வரும் ஒரு சிலரும் இந்த நிறுவனங்களுக்கு அவர்களின் நிதியை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

மற்ற வங்கிகளில் வட்டி விகிதங்கள்:

2201ஆம் ஆண்டுவரை இந்தியாவில் இயங்கி வரும் பொது மற்றும் தனியார் வங்கிகள் நிலையான வைப்பு தொகைக்கு, ஆண்டுதோறும் எவ்வளவு வட்டி  மக்களுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்பதனை கீழே காண்போம்.

  • இந்தியன் வாங்கி:2.85% முதல் 5.15% வரை வட்டி கொடுக்கிறார்கள்.
  • மத்திய வாங்கி: 2.75 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை கொடுக்கிறார்கள்
  • SBI: 2.90 சதவீதம் முதல் 5.40 சதவீதம் வரை வட்டி கொடுக்கிறார்கள்
  • ICICI Bank: 2.50% முதல் 4.40 சதவீதம் வரை
  • HDFC Bank: 2.50 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரை
  • கனரா வங்கி: 2.90 சதவீதம் முதல் 5.50 சதவீதம் வரை
  • Axis Bank: 2.5% முதல் 5.75 சதவீதம் வரை
  • பஞ்சாப் நேஷனல் வங்கி: 2.90 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரை
  • IDFC Bank : 2.75 சதவீதம் முதல் 5.75 சதவீதம் வரை

ஆனால் இவர்களைக் காட்டிலும் கூகுள் நிறுவனத்தின் இந்த ஒரு அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பது. ஒரு வருட வைப்பு நிதிக்கு 6.85% வட்டி கொடுப்பதாகவும். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு 7.35 சதவீதம் வட்டி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

Post a Comment (0)
Previous Post Next Post