மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?

 இந்தியாவைப் பொருத்தவரையில் மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே பலரும் பயப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்தப் பதிவில் சாமானிய மக்கள் அனைவருக்கும் எளிதில் புரியும்படி நாங்கள் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறோம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது அதிக எண்ணிக்கையிலான நபர்களின் மூலம் சிறு சிறு நிதியாகத் திரட்டப்பட்டு அதனை ஒன்று சேர்த்து உருவாக்கப்படுவது மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும். இவ்வாறு திரட்டப்படும் நிதியைப் பெரிய தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வேறுசில பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் அந்த நிதியை உருவாக்குவதற்கு உதவிய சிறிய முதலீட்டாளர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்.

இவ்வாறு பல மக்களிடமிருந்து திரட்டப்படும் நிதியை ஈக்விட்டி மற்றும் பணச் சந்தைகள் போன்ற பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வார்கள், அதன் பிறகு அதன் மூலம் கிடைக்கும் வருமானங்களை ஒரு சில செலவுகளைக் கழித்த பின்னர் விகிதாச்சார முறையில் ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். ஏனென்றால் பங்குச்சந்தையில் ஒரு சாமானிய மனிதர் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஒரு சில ஆபத்துகள் அவற்றில் இருக்கக்கூடும். 

ஒரு பங்கு சந்தையில் சரியான நிறுவனங்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும், பிறகு அவற்றில் நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும், அதன் பிறகு எவ்வளவு பணம் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்பதனை கணக்கிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கிய காலம் முதல் அந்த முதலீட்டைத் திரும்பப் பெறும் வரையில் நீங்கள் மிகக் கவனமாகவும் மற்றும் நீங்கள் முதலீடு செய்த நிறுவனங்களைப் பற்றிய அன்றாட தகவல்களை நீங்கள் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அப்போதுதான் ஒரு சிறந்த லாபத்தை எடுக்க முடியும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் என்பது இது போன்று சிக்கல்களை முதலீட்டாளர்களுக்குக் கொடுக்காது. இந்த நிறுவனம் பல மனிதர்களிடம் மியூச்சுவல் பண்ட்க்காக நிதித் திரட்டுகிறார்களோ  அந்த நிறுவனம் மட்டுமே எங்கு முதலீடு செய்ய வேண்டும் எவ்வளவு கால முதலீடு செய்ய வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் திரட்டி அதன் அடிப்படையில் அந்த நிதியை முதலீடு செய்வார்கள். நம்மளைப் போன்ற சிறிய முதலீட்டாளர்கள் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைத் தேர்வு செய்வது மட்டுமே முக்கியமானதாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் எவ்வாறு வேலை செய்கிறது?

பங்குச்சந்தையை பற்றி அடிப்படை தகவல்கள் எதுவும் தெரியாதவர்கள் எவ்வாறு நீங்கள் உங்களின் பணத்தை முதலீடு செய்வது என்று தவித்துக் கொண்டு இருப்பீர்கள். நீங்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள சரியான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைத் தேர்வு செய்து, அவற்றில் நீங்கள் உங்களால் முடிந்த தொகையை மாதந்தோறும் முதலீடு செய்ய முடியும். 

இவ்வாறு உங்களைப் போன்ற சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டும் அந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, பங்குச் சந்தைகளில் உள்ள பலவகையான பத்திரங்கள் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்வார்கள். குறிப்பாக என்ன பங்கில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று அவர்களின் தொழில்நுட்ப வல்லுனர்கள்மூலம் முன்கூட்டியே அவற்றைப் பகுப்பாய்வு செய்து அதன் பிறகு முதலீட்டைப் தொடங்குவார்கள்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்:

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பலவகையான திட்டங்களை வைத்துள்ளார்கள். ஒரு சிறிய முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பு எந்த வகையான திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து உள்ளீர்கள் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்துள்ள திட்டத்திற்கு ஏற்ப அந்த நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் உள்ள பலவகையான சொத்துகளில் முதலீடு செய்வது வழக்கம். உதாரணமாக ஈக்விட்டி திட்டம் என்று ஒன்று இருக்கிறது, நீங்கள் தேர்வு செய்துள்ள அந்த நிறுவனமானது ஈக்விட்டி திட்டத்திற்காக நிதியைத் திரட்டி இருந்தாள், அவர்கள் திரட்டிய அந்த நிதியில் பெரும்பான்மையானவைகளை பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளில் முதலீடு செய்வார்கள்.

டெபிட்(கடன்) திட்டம்:

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இரண்டாவதாக இருப்பது டெபிட் (கடன்) திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் நிதியைத் திரட்டி இருந்தால், உங்களிடமிருந்து அவர்கள் திரட்டிய அந்த நிதியை அரசாங்க பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள்.

லாப கணக்கீடு:

மியூச்சுவல் பண்ட் பொருத்தவரையில் உங்களிடமிருந்து வாங்கப்படும் நிதிக்காக உங்களுக்கு யூனிட்களை கொடுப்பார்கள். உதாரணமாக நீங்கள் ஆண்டுக்கு 20000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று வைத்துக்கொண்டால், உங்களுக்கு 20 ரூபாய் என்ற வீதத்தில் அந்தப் பண்ட்க்கான யூனிட்டுகள்  கொடுக்கப்படும். ஒட்டுமொத்தமாக உங்களுக்கு 1000 யூனிட்டுகளை கொடுப்பார்கள். 

நீங்கள் முதலீடு செய்த காலத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பிறகு உங்களின் முதலீட்டு மதிப்பு 25 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் அந்தப் பண்டினை நீங்கள் வாங்கியுள்ள நிறுவனங்களிடமே விற்க முடியும். நீங்கள் வாங்கியபோது ஒரு யூனிட்டின் விலை 20 ரூபாயாக இருந்தது உங்களின் ஒட்டு மொத்த முதலீடு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் இப்பொழுது ஒரு யூனிட்டிற்கு 5 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இப்போது நீங்கள் 1000 யூனிட்டுகளையும் விற்றால் உங்களுக்கு 25000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

அடுத்த பதிவில் மேலும் இதுபற்றி இருக்கும் ஒரு சில முக்கியமான சேவைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

Post a Comment (0)
Previous Post Next Post