டிவிடெண்ட்: பங்கு சந்தையில் நீண்ட நாள் முதலீடு செய்யும் போது கவனத்தில் கொள்ளவேண்டியது

 பங்குச்சந்தையில் நீண்டநாள் முதலீடு செய்யும்பொழுது நீங்கள் கீழ்க்கண்டவற்றில் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றாலும் நீண்டநாள் முதலீட்டில் மிகக் குறைவான பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும். பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இரண்டு வகையாக நீங்கள் பங்குகளை வாங்கி விற்க முடியும். ஒரு நிறுவனத்தின் பங்கினை தினமும் வாங்கி அன்றைய நாளிலையே விற்கலாம், இதனைத் தினசரி வர்த்தகம் என்று கூறுவார்கள். அதுவே ஒரு நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை இன்று வாங்கி தொடர்ந்து விரிக்காமல், ஆறு மாத காலம் அல்லது ஒரு வருடம்வரை வைத்திருந்து அதன் பிறகு விற்பது நீண்டநாள் முதலீடு என்று கூறுவார்கள்.

ஒரே நாளில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்கும்பொழுது நீங்கள் வாங்கிய அந்தப் பங்குகள் உங்களது டீமேட் கணக்கிற்கு வந்து சேராது. இதனால் நீங்கள் வாங்கிய அந்த நிறுவனம் உங்களுக்கு லாபத்தை கொடுத்தாள் நீங்கள் வாங்கிய விலையிலிருந்து விற்ற விலைவரைக்கும் இருக்கும் அந்த இடைவெளி மட்டுமே உங்களுக்கு லாபமாக அமையும். ஆனால் நீண்ட நாள் முதலீட்டில் இவ்வாறு இல்லாமல் உங்களுக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும், அவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.

நீண்டநாள் முதலீட்டைப் பொறுத்தவரை குறிப்பிட்ட பங்குகளை ஒரு நிறுவனத்தில் வாங்கி வைத்துவிட்டால் உங்களுக்கு எப்பொழுது விற்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ அல்லது எப்பொழுது உங்களுக்கான லாபம் கிடைக்கிறதோ அப்பொழுது அந்தப் பங்குகளை நீங்கள் விற்க முடியும். உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் பங்கு விலை 90 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த நிறுவனத்தில் 500 பங்குகளை வாங்கி நீண்டநாள் விற்காமல் வைத்திருக்கும்பொழுது, ஒரு பங்கிற்கு 30 ரூபாய் லாபம் கிடைப்பதாக வைத்துக் கொண்டால், 500 பங்குகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் முதலில் செய்த அந்த நிறுவனத்தில் டிவிடெண்ட் கொடுக்கும் வணக்கம் இருக்குமானால் உங்களது லாபம் இல்லாமல் உங்களுக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

டிவிடெண்ட் என்றால் என்ன?

டிவிடெண்ட் என்பது ஒரு நிறுவனம் ஆண்டிற்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கிறது என்று வைத்துக்கொண்டால், அந்த நிறுவனம் அவர்களின் ஞாபகத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை தங்களது பங்குதாரர்களுக்கு இலவசமாகக் கொடுப்பார்கள். அதாவது ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து ஒரு 50 கோடி ரூபாயை தங்களது பங்குதாரர்களுக்கென்று ஒதுக்கி வைத்து அவற்றைச் சரி சமமாகப் பிரித்துக் கொடுப்பது டிவிடெட் ஆகும்.

டிவிடெண்ட் கொடுக்கும் காலங்கள்:

இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை ஆறாயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருக்கிறார்கள். அவர்களில் டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனங்கள் ஆனது மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர்களது லாப நஷ்டங்களைப் பொது வெளியில் வெளியிடுவார்கள். அப்பொழுது அவர்களின் நிறுவனம் லாபம் அடைந்திருக்கும் தருவாயில் அவர்கள் அவர்களின் பங்குதாரர்களுக்குக் டிவிடெண்ட் கொடுப்பதாக அறிவிப்பார்கள். இது போன்று ஆண்டிற்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒரு சில நிறுவனங்கள் டிவிடென்ட் கொடுப்பார்கள். அதே போன்று அவற்றை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் கொடுக்காமல் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து வைத்து ஆண்டிற்கு ஒருமுறை கொடுப்பார்கள்.

டிவிடெண்ட் கொடுக்கும் நிறுவனங்கள்:

முன்பு சொன்னது போலப் பங்குச் சந்தையில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் இருந்தாலும், அனைத்து நிறுவனங்களும் லாபங்களை அடைவதில்லை, ஒருவேளை அனைத்து நிறுவனங்களும் லாபம் எடுத்தாலும், அனைவரும் டிவிடென்ட் கொடுப்பதில்லை. பங்குச் சந்தையில் இருக்கிற ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே அவர்களின் பங்குதாரர்களுக்கு ஆண்டுதோறும் டிவிடென்ட் கொடுக்கிறார்கள். டிவிடெண்ட் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. அந்த நிறுவனங்களின் எண்ணத்திற்கேற்ப அவர்கள் டிவிடெண்ட் கொடுக்கும் வேண்டுமா கூடாதா என்று அவர்களே தீர்மானிக்க முடியும்.

எவ்வளவு டிவிடெண்ட் கொடுப்பார்கள்:

உதாரணத்திற்கு மேலே கூறி இருப்பது போல நீங்கள் 500 பங்குகளை வாங்கி வைத்து அவற்றில் பதினைந்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் முதலீடு செய்த அந்த நிறுவனம் உங்களுக்கு ட்விட்டர் கொடுப்பதாக அறிவித்துவிட்டால் அவர்கள் ஒரு பங்கிற்கு ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் 3 ரூபாய் என்று அவர்களின் லாபத்திற்கு ஏற்ப டிவிடெண்ட் கொடுப்பார்கள். உங்களிடம் 500 பங்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர்கள் ஒரு பங்கிற்கு இரண்டு ரூபாய் டிவிடெண்ட் கொடுப்பதாகக் கூறினால் உங்களுக்கு ஆயிரம் ரூபாய் லாபங்கள் கிடைக்கும். ஒரு சில நிறுவனங்கள் ஆண்டிற்கு 8 ரூபாய் வரை டிவிடென்ட் கொடுக்கக்கூடும் அது போன்ற நிறுவனங்களை நீங்கள் கண்டறிந்து அவற்றில் நீங்கள் நீண்ட நாள் முதலீடு செய்தால். உங்களின் லாபத்திற்கு மேல் கூடுதலாக 5,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

டிவிடெண்ட் அறிவிப்புத் தேதி:

Declared Date: 

இந்தத் தேதியில் அந்த நிறுவனத்தில் உள்ள குழு உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தேதியை டிவிடெண்ட் கொடுப்பதற்காக அறிவிப்பார்கள். உதாரணத்திற்கு 08/09/2021 அன்று குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து 25/09/2021 தேதியன்று தங்களது பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கக்கூடிய அந்த நாளை Declared Date என்று கூறுவார்கள்.

Record Date:

இந்தத் தேதியன்று நீங்கள் டிவிடெண்ட் கொடுக்கக்கூடிய அந்த நிறுவனத்தில் பங்குதாரராக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 25/09/2021 தேதியன்று டிவிடெட் கொடுப்பதாக அறிவித்து இருப்பார்கள் இந்த நாளை ரெக்கார்ட் டேட் என்று கூறுவார்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தில் கொடுக்கக்கூடிய டிவிடென்ட் வாங்க வேண்டுமென்றால் இந்தத் தேதி அன்று அந்த நிறுவனத்தில் நீங்கள் பங்குதாரராக இருக்க வேண்டும். 

Ex-dividend date:

ஒரு நிறுவனம் தங்களது பங்குதாரர்களுக்கு டிவிடென்ட் கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கக்கூடிய தினத்தை Declared Date என்று கூறுவார்கள். அதுவே எந்தத் தேதியில் தங்களது பங்குதாரர்களுக்குக் டிவிடெண்ட் கொடுக்க வேண்டும் என்ற கூறக்கூடிய அந்தத் தினத்தை Record Date என்று கூறலாம்.  Declared Date மற்றும் Record Date ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட நாளைப் பங்குப் பரிவர்த்தனை வாரியம் அறிவிப்பார்கள். அந்த நாளுக்கு முன்னாடியே நீங்கள் டிவிடெண்ட் கொடுக்கக்கூடிய நிறுவனங்களின் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்கும்.

Post a Comment (0)
Previous Post Next Post