Investment vs Trading | பங்கு சந்தையில் முதலீடு செய்வதா ? அல்லது டிரேடிங் செய்வதா?

 பங்குச்சந்தை என்று எடுத்துக்கொண்டால் அங்கு டிரேடிங் செய்வதா அல்லது முதலீடு செய்வதா என்ற குழப்பம் எல்லோருக்கும் ஏற்படும். ஒருசிலர் டிரேடிங் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும், மற்ற ஒரு சில பேர் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறுவார்கள். இதனால் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியாது. இன்று பார்க்க இருக்கும் இந்தப் பதிவின் மூலம் நீங்கள்  தெளிவான ஒரு முடிவை எடுத்துப் பங்குச்சந்தையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கற்றுக்கொள்ள முடியும்.

Investment vs Trading

Investment:

இன்று நான் ஒரு நிறுவனத்தில் ஆயிரம் பங்குகளை வாங்குவதாக எடுத்துக்கொள்வோம், வாங்கிய அந்தப் பங்குகளை நான் விற்கவில்லை. அதைத் தொடர்ந்து மேலும் அடுத்த நாள் சற்று அதிகமாக 2000 பங்குகளை வாங்கி கொள்கிறேன். அந்த நிறுவனத்தில் எனக்கு மொத்தமாக 3000 பங்குகள் கிடைத்துவிட்டது. இந்த மூவாயிரம் பங்குகளையும் நான் விரிக்காமல் இரண்டு மாதங்கள் காத்திருக்கிறேன். பிறகு அவற்றில் 1500 பங்குகளை மட்டும் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். மீதமுள்ள பங்குகளை நான் அடுத்து ஐந்து மாதம் காத்திருந்த பிறகு விற்கிறேன். இதற்குப் பெயர்தான் Investment.

உங்களிடம் அதிகமான பணம் இருக்கிறது என்றால், ஒரே நேரத்தில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை விற்காமல், அவற்றின் விளை சற்று உயரும் வரை காத்திருந்து மூன்று மாதம், ஒரு வருடம் அல்லது ஐந்து வருடம் கழித்து பிறகு விற்பனை செய்து கொள்ளலாம். இது போன்ற முதலீடுகளை நீங்கள் செய்யும்போது தினசரி பங்குச்சந்தையில் நடைபெறும் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றை பார்த்துப் பயப்படாமல் இருக்க முடியும்.

Trading:

டிரேடிங் என்பது ஒவ்வொரு நாளும் நீங்கள் விரும்பிய நிறுவனத்தின் பங்குகளைக் காலையில் வாங்கி அன்றைய நாள் முடிவதற்குள் விற்பது ஆகும். இது போன்று நீங்கள் செய்யும்போது நீங்கள் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். எந்த நிறுவனத்தில் நீங்கள் டிரேடிங் செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பங்குச் சந்தை சம்பந்தமான செய்திகளைத் தினசரி நீங்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது மட்டும்தான் டிரேடிங்கில் நீங்கள் வெற்றி பெற முடியும்.

Investment vs Trading:

நீங்கள் இன்வெஸ்ட்மெண்ட் செய்யும்பொழுது ஒன்று அல்லது இரண்டு நிறுவனத்தில் மட்டுமே முதலீடு செய்ய முடியும், ஒருவேளை உங்களிடம் அதிகமான பணம் இருக்கும் தருவாயில் நீங்கள் அதிகபட்சமாக ஐந்து முதல் பத்து நிறுவனங்களில் முதலீடு செய்வீர்கள். இதுவே நீங்கள் டிரேடிங் செய்யும்பொழுது, உங்களிடம் குறைவான பணம் இருந்தால் கூடப் போதும். இன்று ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கி விற்பனை செய்யலாம் மற்றும் நாளை ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கி விற்பனை செய்ய முடியும். இப்படி ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஏற்ற நிறுவனத்தில் டிரேடிங் செய்திட முடியும். 

அதுமட்டுமில்லாமல் நீங்கள் முதலீடு செய்யும்பொழுது குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை உங்களுக்கு dividend, போனஸ் போன்ற சலுகைகளும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் நீங்கள் டிரேடிங் செய்யும்பொழுது இது போன்ற சலுகைகள் ஏதும் கிடைக்காது. டிரேடிங்கில் அதிகமான ஆபத்துக்கள் இருக்கும் முதலீட்டில் அதிகமான ஆபத்துகள் இருக்காது குறைவான லாபம் வந்தாலும் பாதுகாப்பானதாக இருக்கும்.

Post a Comment (0)
Previous Post Next Post