பங்குச் சந்தையைப் பொறுத்தவரை நீண்டநாள் முதலீடு செய்ய வேண்டுமென்றால் ஒரு நிறுவனத்தைப் பற்றிய போதுமான தகவல்களை நீங்கள் திரட்ட வேண்டும். அப்போது தான் உங்களால் அந்த நிறுவனத்தில் நீண்ட காலத்திற்கு உங்களது முதலீட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இந்திய பங்குச் சந்தை பொருத்தவரையில் எந்த நிறுவனத்தில் நீண்டகால முதலீடு செய்வதாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் Share Holding Pattern பற்றி நீங்கள் முன்பே தெரிந்து இருக்க வேண்டும்.
Share Holding Pattern:
பங்குச்சந்தைக்கு நிறுவனங்கள் வருவதற்கு முன்பு அந்த நிறுவனத்தைத் தொடங்கிய உறுப்பினர்கள் அல்லது உரிமையாளர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் அந்த நிறுவனம் பணம் திரட்டுவதற்காகப் பங்குச்சந்தைக்கு வந்துவிட்டால் அப்போது அந்த நிறுவனத்தில் பொதுமக்களாகிய நீங்களும் ஒரு அங்கமாக மாறி விடுவீர்கள். பங்குச் சந்தையில் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்களைக் கீழ்கண்டவாறு கூறுவார்கள்.
1.Institutions. 2.Retail investors.
Institutions:
Institutions(நிறுவனங்கள்)களை பொருத்தவரையில் மூன்று விதமாகப் பிரிக்கலாம்,
- உள்நாட்டு நிறுவனங்கள்(Domestic companies or Domestic Institutions)
- வெளிநாட்டு நிறுவனங்கள்(Foreign companies or Foreign Institutions)
- அரசு நிறுவனங்கள்
பங்குச்சந்தைகளில் இருக்கும் முக்கியமான அல்லது நல்ல வருங்காலங்களில் இருக்கக்கூடிய மதிப்புகளைப் பொறுத்து அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் முந்திக் கொண்டு தங்களது முதலீட்டைச் செய்வார்கள். அதுமட்டும் அல்லாமல் ஒரு சில அரசு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் இருக்கக்கூடிய சிறந்த பங்குகளைக் கணித்து அவற்றில் முதலீடு செய்வதும் உண்டு. எந்த ஒரு நிறுவனங்களில் இது போன்று உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கிறதோ, அந்த நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி அடைய போகிறது அல்லது வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது என்று அர்த்தமாக இருக்கும். இது போன்ற சமயங்களில் சில்லறை வர்த்தகர்கள் ஆகிய நீங்களும் அந்த நிறுவனங்களை அறிந்து முதலீடு செய்தால் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும்.
Retail investors:
Retail investors என்பவர்களைச் சில்லரை வர்த்தகர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் பெரும்பாலும் நம்மைப் போன்று மிகச் சிறிய முதலீடுகளையும் அல்லது ஒரே நேரத்தில் மூன்று நான்கு நிறுவனங்களில் மட்டும் நீண்ட நாள் இருக்கு முதலீடுகளைச் செய்வார்கள். ஆனால் Institutions போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தைகளில் இருக்கும் பெரும்பாலான பங்குகளைக் கணித்து, அவற்றில் எவ்வளவு காலம் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும், அதைவிட மற்ற பங்குகளில் முதலீடு செய்வதால் பலன் இருக்கா அல்லது இல்லையா என்பதை தினந்தோறும் ஆராய்ந்து, அவர்களின் முதலீடுகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
எந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளில் இது போன்ற Institutions அதிக நாட்டம் காட்டி அவற்றில் அவர்களின் முதலீடுகளை அதிகரிக்கிறதோ அந்த நிறுவனங்கள் மிகக் குறுகிய காலத்தில் நல்ல பலன் கொடுக்கக்கூடிய நிறுவனங்களாக இருக்கக்கூடும். அது போன்ற நேரங்களில் நீங்களும் அதே நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு முதலீடுகளைச் செய்வதினால் உங்களுக்கும் சிறந்த லாபங்கள் கிடைக்கும்.
பங்குச்சந்தையில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளைக் கணக்கிடும்பொழுது, அவற்றில் 65 சதவீதத்திற்கு குறைவான பங்குகளை மட்டும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வைத்திருக்க வேண்டும். இது செபியின் ஒருவகையான அறிக்கையாகும். இதன்படி ஒவ்வொரு நிறுவனத்தின் உரிமையாளர்களும் 65% பங்குகளை மட்டுமே கைவசம் வைத்திருப்பார்கள். மீதமுள்ள பங்குகளை Institutions மற்றும் சில்லரை வர்த்தகர்கள் ஆகிய நம்மிடம் அவர்கள் விற்று விடுவார்கள்.
Promotors Holdings:
பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளரின் கைவசம் இருக்கும் பங்குகளில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் அடையும்பொழுது அந்த நிறுவனம் மீண்டும் வளர்ச்சி அடைய போகிறது அல்லது ரொம்ப மோசமான நிலைமையில் இருக்கிறது என்று கணிக்க முடியும். உதாரணமாக ஒரு நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளில், அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது என்றால் அந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது அல்லது அதன் மதிப்பு குறைந்துகொண்டே இருக்கிறது என்று அர்த்தம். அந்த நிலையில் சில்லறை வர்த்தகர்கள் ஆகிய நீங்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யக் கூடாது.
அதே போன்று ஒரு நிறுவனத்தின் ஒட்டு மொத்த பங்குகளில் 55 சதவிகித பங்குகளை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வைத்திருப்பதாக உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அடுத்து ஒரு சில மாதங்களில் அந்த உரிமையாளர் மேலும் 5 சதவீத பங்குகளை வாங்கி ஒட்டுமொத்தமாக 60 சதவீத கையிருப்பு வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டாள். அந்த நிறுவனம் ஏதோ ஒரு காரணத்திற்காக மேலும் வளர்ச்சி அடைய போகிறது என்று அந்த உரிமையாளருக்கு முன்கூட்டியே தெரிய வருவதன் காரணமாக அவர் மேலும் 5 சதவிகித பங்குகளை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்கிறார் என்று அர்த்தமாகும். இந்த நேரத்தில் நீங்களும் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.
Retail investors எவ்வாறு முதலீடு செய்வது?
முன்பு சொன்னது போல ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் கைவசம் 50 சதவிகித பங்குக்கும் மேல் கையிருப்பு இருந்தால் அந்த நிறுவனங்களை நீங்கள் நம்பி முதலீடு செய்யலாம், அதே போன்று அவரிடம் இருக்கும் பங்குகளைவிட தற்போது 5% அல்லது 10% பங்குகள் கூடுதலாக இருக்கிறது என்றால், அவற்றையும் நீங்கள் ஒரு சரியான வளர்ச்சி நேரமாகக் கருதி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு கையிருப்பு அதிகரிக்கிறதோ, அந்த நிறுவனங்களில் நீங்களும் முதலீடு செய்யும்பொழுது சிறந்த லாபம் கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குகளைப் படிப்படியாக விற்று வந்தாள் அந்த நிறுவனம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று அர்த்தம். அந்த நேரத்தில் நீங்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்திய பங்குச் சந்தையைப் பொருத்தவரையில் நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அந்த நிறுவனத்தின் Share Holding Pattern மட்டும்தான். ஏனென்றால் இந்த Share Holding Pattern மூலம்தான் யார் யாரிடம் எவ்வளவு பங்குகள் கையிருப்பு இருக்கிறது என்பதை கணிக்க முடியும்.