பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ- இந்திய பங்கு சந்தை ஒரு கண்ணோட்டம்!..

தினமும்தோறும் நீங்கள் பார்க்கும் மற்றும் படிக்கும் செய்திகள் அனைத்திலும் பங்குச் சந்தை சார்ந்த ஏதோவொரு தகவல்கள் கேட்டு இருப்பீர்கள், ஆனால் அதற்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லாதது போல அந்தத் தகவல்களைப் புறக்கணித்துச் சென்றிருப்பீர்கள். உங்களின் வாகனத்திற்கு பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் முதல் மருத்துவ பொருட்களை வரை அனைத்தின் விலையையும் முடிவு செய்வதில் பெருமளவில் பங்கு சந்தையின் செயல்பாடுகள் இருப்பது உங்களில் எத்தனைபேருக்கு தெரியும்.

பங்கு மற்றும் பங்கு வர்த்தகம்பற்றிய ஒரு கண்ணோட்டம் இந்தப் பதிவில் பார்க்கலாம். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கான அடைப்படை தகவல்களைத் தெரிந்து கொள்ள Ranjithtc YouTube சேனலுடன் இணைந்திருங்கள்.

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ

பங்கு சந்தையைப் பற்றித் தெரிந்து கொள்ளுமுன் பங்குப் பரிவர்த்தனை வாரியம்(Stock Exchange) பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். பங்குப் பரிவர்த்தனை வாரியம் என்பது?… பங்குகளை வாங்குபவர்களும் விற்பவர்களும் சந்திக்கக்கூடிய இடமாகும். ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்க வேண்டும் என்றால்?… அந்த நிறுவனம் பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பங்கு வாங்க வேண்டுமேற்றல் நேரடியாக வாங்கிவிட முடியாது. ஒரு தரகர்மூலம் எனக்கு இந்த நிறுவனத்தின் பங்கு வேண்டும் என்று கூறும்போது, உங்களது சார்பில் அந்தத் பங்குத் தரகர்(Stock Broker) பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும், அந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கி உங்களுக்குக் கொடுப்பார்கள்.

இந்தியாவை பொறுத்தவரையில் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ(BSE and NSE) என்ற இரண்டு முக்கியமான பங்குப் பரிவர்த்தனை வாரியம் இருக்கிறது, பிஎஸ்இ  என்பது பாம்பே பங்குச் சந்தை(Bombay Stock Exchange) என்பதாகும். இது 1875 முதல் செயல்பாட்டில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் முதல் பங்குப் பரிவர்த்தனை வாரியம் ஆகும்.

என்எஸ்இ என்பது தேசிய பங்குச் சந்தை(National Stock Exchange) எனப்படும். இது இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் இரண்டாவது முக்கிய பங்கு பரிமாற்ற வாரியம் ஆகும். மேலும் இது 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் டிஜிட்டல் பங்கு பரிவர்த்தனையில் இது முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க வேண்டும் என்றால் ஸ்டாக் புரோக்கர் மூலம் இந்த இரண்டு பரிவர்த்தனை வாரியம் மூலம் மட்டும் தான் வாங்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். BSEயை காட்டிலும் NSEயில் அதிகளவு வர்த்தகம் நடைபெறுவது அதன் குறுகியகால வளர்ச்சியைக் காட்டுகிறது.

பங்கு சந்தையைப் பொறுத்தவரையில் நீங்கள் Bse மற்றும் Nse ஆகிய இரண்டிலும் மாற்றிப் பங்குகளை வாங்கி மற்றும் விற்று கொள்ளலாம். உதராணமாக டாடா மோட்டொரஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை Nse-யில் 470.20 உள்ளதாக வைத்துக்கொண்டால், Bse-யில் 270.00 காசுகளாக இருக்கும். இதுமட்டும்தான் NSE மற்றும் BSE ஆகிய இரண்டு பங்குப் பரிவர்த்தனை வாரியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகும்.

Post a Comment (0)
Previous Post Next Post