தங்கம் மற்றும் நிலங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு வரி கட்ட வேண்டும்? என்பதனை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் நீண்டநாள் முதலீட்டுக்காகத் தங்கம் மற்றும் நிலம், நிலம் சார்ந்த பாண்டு முதலீடுகள் அதிகம் மக்களைக் கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த வகை முதலீட்டில் ஆபத்து மிகக் குறைவு என்பதுதான்.
இந்தியாவின் சிறு சேமிப்பு முறை:
இந்திய மக்கள் பெரும்பாலும் தங்க கட்டிகளாக அல்லது நிலங்களும், நிலங்கள் சார்ந்த பாண்டுகளிலும் பெரும்பாலும் தங்களது சிறு சேமிப்புகளை முதலீடு செய்து வருகின்றனர். மிகக் குறைவான முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றார்கள், அதுவே சற்று பெரிய முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீடு செய்கிறார்கள்.
தங்கம் முதலீடு
நீங்கள் சொந்த பயன்பாட்டுக்காகத் தங்க ஆபரணங்கள் வாங்கும்பொழுது நீங்கள் எந்த வித வரியும் கட்ட வேண்டிய அவசியமில்லை. இதுவே நீங்கள் சேமிப்பு வகையைத் தேர்ந்தெடுத்து தங்க கட்டிகள் அல்லது தங்க பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும் பட்சத்தில் அதற்கான வரியை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும். தங்கத்திற்கு எப்பொழுதுமே மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும், ஏனென்றால் எப்பொழுதுமே தங்கத்தின் விலை உச்சத்தில் இருப்பது தான் இதற்கான காரணமாக இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தங்கத்தின் விலை உச்சவரம்புச் என்றாலும் தங்கத்தை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
ரியல் எஸ்டேட் முதலீடு
நீங்கள் விவசாயம் செய்வதற்கு அல்லது சொந்த பயன்பாட்டிற்காக நீங்கள் நிலங்களை வாங்கும்பொழுது அவற்றில் ஆபத்து என்பது சற்று குறைவாக இருக்கும். ஆனால் நீங்கள் ரியல் எஸ்டேட் துறையின் மூலம் ஒரு கட்டிடமாக அல்லது நிலா பத்திரமாக வாங்கும் பட்சத்தில் அவற்றில் ஒரு சில ஆபத்துகள் இருக்கக்கூடும்.
உதாரணமாக நீங்கள் விவசாயத்திற்காக நிலங்கள் வாங்கும் பட்சத்தில் அவற்றை நீங்கள் உடனே விற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடு முறைமூலம் கட்டிடங்களை வாங்கி விற்பவர் ஆகவோ அல்லது நிலங்களை வாங்கிக் கை மாற்றுபவர்கள் ஆகவோ இருந்தால் அவ்வப்போது விலையில் சற்று ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் விருக்க காத்திருக்கும் அந்த இடத்தைச் சுற்றி நடக்கும் சுற்றுச் சூழலுக்குத் தகுந்தவாறு நிலத்தின் மதிப்பு ஏற்றம் இறக்கம் காணப்படும்.
எதற்கெல்லாம் நீங்கள் வரி செலுத்த வேண்டும்?
நீங்கள் தங்க கட்டிகளாக அல்லது பாண்டுகளாக வைத்திருக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை ஏறும்போது அவற்றை நீங்கள் விற்று லாபம் பார்க்க முடியும், அதே நேரம் அதற்கான வரியைச் செலுத்த வேண்டியது கட்டாயமாக இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்து மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் வருமானவரி ஸ்லாப் ரேட்டிங் அடிப்படையில் கணக்கிடப்பட்டு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும் அதுவே உங்களது தங்க முதலீட்டை மூன்று ஆண்டுகளுக்கு மேல் விற்பனை செய்தால் இண்டெக்ஸ் காஸ்ட் அடிப்படையில் 20.8 சதவீதம் வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இதுவே நீங்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அடுத்த இரண்டு ஆண்டுக்குள் அவற்றை விற்பனை செய்தால் முன்பு சொன்னதுபோல ஏற்கனவே உள்ள வருமான வரி ஸ்லாப் ரேட்டிங் அடிப்படையில் நீங்கள் வருமான வரி கட்ட வேண்டி இருக்கும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீங்கள் காத்திருந்து விற்கும் தருவாயில் 20.8 சதவிகிதமான இண்டெக்ஸ் காஸ்ட் அடிப்படையிலான வரி செலுத்த வேண்டியிருக்கும்.