Campus Footwear IPO: 1400 கோடி திரட்ட திட்டம்

முன்னணி ஸ்போர்ட்ஸ் ஷூ பிராண்ட் கேம்பஸ் ஆக்டிவேர், ஆரம்ப பொது வழங்கல்(IPO) மூலம் ரூ 1400 கோடி(250கோடி அமெரிக்க டாலர் மதிப்பு) திரட்டத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Campus Footwear IPO: 1400 கோடி திரட்ட திட்டம்

நிறுவனத்தின் வர்த்தகம்

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட கேம்பஸ் ஆக்டிவேர் நிறுவனமானது சாதாரண ஷூக்கள், ரன்னிங் ஷூக்கள், வாக்கிங் ஷூக்கள், ஸ்லிப்பர்கள், மற்றும் செருப்புகள் போன்ற பல வகையான காலணிகளைச் சிறந்த விலையில் பல வகைகளில் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். இது இந்தியா முழுவதும் 28 மாநிலங்களில் 400க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களை கொண்டு வர்த்தக விநியோகத்தை செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்திய முழுவதும் இந்த நிறுவனமானது 18200 சில்லறை விற்பனையாளர்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் வருவாய்

இந்த நிறுவனமானது 2019-2020 நிதியாண்டில் கிட்டத்தட்ட 62.37 கோடி இலாபமாகப் பெற்றிருந்தது. அதற்கு அடுத்ததாக 2020-21 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 26.86 கோடியை மட்டும் லாபமாகப் பெற்றுயிருந்தது, இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட 57% சரிவைக் கொடுத்திருந்தது. இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ஆனது சுமார் 3 சதவீதம் சரிந்து 715.08 கோடியாக உள்ளது. 2021 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், இந்த நிறுவனம் 84.80 கோடி நிகர லாபமாக ரூ844.94 கோடியுடன் மொத்த வருவாய் ஈட்டியுள்ளது.

Campus Footwear IPO விலை மற்றும் தேதி

Campus Footwear IPO பங்குகளின் ஒதுக்கீடு மே 4ஆம் தேதி இறுதி செய்யப்படும். அதேசமயம் பணத்தை திரும்பப் பெறுவது மே 5 முதல் தொடங்கும். மேலும் பங்குகள் மே 6ஆம் தேதி டீமேட் கணக்குகளில் வரவு வைக்கப்படும், மே 9ம் தேதிக்குள் ஐபிஓ பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் 278 ரூபாய் முதல் 292 ரூபாய் வரை IPOல் விற்கப்படும்.

ஐபிஓ வின் நோக்கம்

இந்த ஐபிஓ வின் வெளியீட்டின் மூலம் நிறுவனம் ரூ 1400 முதல் 1800 கோடிவரை திரட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முற்றிலும் நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் தற்போதுள்ள பங்குதாரர்களிடமிருந்து விற்பனைக்கான சலுகை(OFS-Offer for Sale) ஆகும். இதன் முகமதிப்பு (face Value) 5, மொத்தமாக 4,79,50,000 பங்குகள் OFSஇல் ஆஃப்ளோடு செய்யும்.

நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் ஆன ஹரிகிருஷ்ணா அகர்வால் மற்றும் நிகில் அகர்வால் ஆகியோர் OFSஇல் சுமார் 12.5 மில்லியன் பங்குகளை ஆஃப்ளோடு செய்வார்கள். அதேநேரத்தில் TPG Growth III SF Pte Ltd நிறுவனமானது 29.1 மில்லியன் பங்குகளையும், QRG எண்டர்ப்ரைசஸ் 6.05 மில்லியன் பங்குகளையும் விற்கும்.

மேலும் இது போன்ற தகவல்களைத் தெரிந்துகொள்ள எங்களது GOOGLE NEWS பக்கத்துடன் இணைந்திருங்கள்.



Post a Comment (0)
Previous Post Next Post