SKY GOLD LTD Bonus in Tamil... 100 பங்குகள் இருந்த 100 இலவசம்

பங்குச்சந்தையை பொருத்தவரையில் நீண்டகால முதலீடு செய்யும்பொழுது பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பங்குக்கு ஏற்பப் போனஸ் கிடைப்பது. SKY GOLD LTD நிறுவனமானது தங்களது முதலீட்டாளர்களுக்குத் தற்போது 1:1 போனஸ் கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. SKY GOLD LTD Bonus பற்றி இந்தக் கட்டுரையில் தெளிவாகப் பார்க்கலாம்.

SKY GOLD LTD Bonus in Tamil... 100 பங்குகள் இருந்த 100 இலவசம்

Sky Gold Ltd நன்மைகள்:

  1. இந்த Sky Gold Ltd நிறுவனமானது NSEஇல் இல்லை, இது BSEஇல் மட்டும் பட்டியலிடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  2. இந்தப் பங்கின் இன்று 350 ரூபாயில் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கிறது.
  3. இந்த நிறுவனமானது போனஸ் அறிவிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த வர்த்தகத்தினத்தின்போது கிட்டத்தட்ட 12 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.
  4. கடந்த ஜூலை மாதத்திலிருந்து இது படிப்படியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பங்கின் விலை 180 ரூபாயிலிருந்து இன்றைய தினம்வரை 320 ரூபாய் வரை சென்று இருப்பது கவனிக்கத்தக்கது.
  5. Sky Gold Ltd நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டல் ரூ166 கோடி இருக்கிறது.
  6. இதன் EPS ஆனது ரூ32.5 என்ற அளவுக்கு லாபகரமாக இருக்கிறது.

இது என்ன நிறுவனம்?

இந்த Sky Gold Ltd நிறுவனமானது நகைகளை வடிவமைத்து அதன் பிறகு அவற்றைத் தயாரித்து விற்கும் நிறுவனம் ஆகும். ஆனால் இது நேரடியாக வாடிக்கையாளர்களை அணுகி விற்கவில்லை, இவர்கள் மற்ற வியாபாரிகள்மூலம் தாங்கள் தயாரித்த நகைகளை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதனால் இந்த நிறுவனம் உடனடியாக வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் படிப்படியாக இவர்களின் வருமானம் அதிகரிக்கும். இவர்களின் வியாபாரம் ஆன்லைன் மூலமாகவும் சிறு சிறு கடைகளை அணுகியும் விற்பனை செய்கிறார்கள். இவர்களுக்கு கிடைக்கும் ஆர்டர்களை பொருத்தே இவர்களுக்கான வியாபாரமும் இருக்கும்.

அரையாண்டு முடிவு

Sky Gold Ltd கடந்த 2019ஆம் ஆண்டு முதல் படிப்படியாகத் தங்களது வருமானத்தைப் பெருக்கி வருகிறார்கள்.

மார்ச் 2020 அரையாண்டு முடிவுப் படி நிகர லாபம் 4% மகா இருந்தது. அதற்க்கு அடுத்து செப் 2020 மார்ச் 2021இன் படி இவர்களின் நிகர லாபம் 3% மற்றும் 2% எனக் குறைந்தது.

அனால் செப் 2021 ஆம் ஆண்டு இவர்களின் நிகர லாபம் 10% என அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

சென்ற மார்ச் 2022 அரையாண்டு முடிவுப் படி இவர்களின் நிகர லாபம் 7% என உள்ளது.

SKY GOLD LTD Bonus தகவல்கள்:

Sky Gold Ltd நிறுவனம் தங்களது முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற அளவுப்படி போனஸ் கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. செப் 1ஆம் தேதிக்குள் இந்த நிறுவனத்தின் பங்குகளை நீங்கள் வாங்கி வைத்திருந்தால் உங்களுக்கு இந்தப் போனஸ் கிடைக்கும். மேலும் இவர்களின் ரெகார்ட் தேதியாகச் செப் 3 கொடுக்கப்பட்டு இருக்கிறது. உங்களிடம் 100 பங்குகள் இருந்தால் இலவசமாக 100 பங்குகள் கிடைக்கும்.
Post a Comment (0)
Previous Post Next Post