உங்களின் முதல் முதலீடு எப்படி இருக்க வேண்டும்.

 பங்குச் சந்தைக்கு நீங்கள் புதியவராக இருப்பின் உங்களின் முதல் முதலீடு வெற்றிகரமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இதற்கு நீங்கள் டீமேட் கணக்கு திறந்தவுடன் உடனே எந்த ஒரு நிறுவனத்திலும் முதலீடு செய்துவிட கூடாது. சென்ற பதிவில் சிறந்த ஸ்டாக் ப்ரோக்கரை எவ்வாறு தேர்வு செய்வது என்பதனையும் டிமேட் கணக்கு என்றால் என்ன? என்பது போன்றவற்றையும் பார்த்திருக்கிறோம். நீங்கள் சரியான புரோக்கரை அறிந்த பிறகு அவர்களிடம் டீமேட் கணக்கை ஓபன் செய்து உங்களின் முதல் முதலீட்டை எவ்வாறு வெற்றி பெற வைப்பது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

உங்களின் முதல் முதலீடு எப்படி இருக்க வேண்டும்.

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு பங்குச் சந்தையில் உள்ள வர்த்தக வகைகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் எந்த நேரத்தில் பங்குகளை வாங்க வேண்டும் எந்த நேரத்தில் விற்க வேண்டும் என்பதனை நீங்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டு அதன் பிறகு தான் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் அந்த நிறுவனத்தைப் பற்றிய அனைத்து விதமான தகவல்களையும் சேகரிக்க வேண்டும்.

வர்த்தக வகைகள்:

உங்களுக்கு மிக எளிதாகப் புரியும்படி கூற வேண்டும் என்றால் பங்குச் சந்தைகளில் நீங்கள் செய்யக்கூடிய முதலீடு எவ்வளவு நாள் இருக்கப்போகிறது என்பதுதான் பங்குச் சந்தையின் வகைகளைப் பிரித்து வைக்கிறது. அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அந்த முதலீட்டை நீங்கள் ஒரு வாரமோ அல்லது ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு உங்களால் விற்காமல் வைத்திருக்க முடியும். நீங்கள் இருக்காமல் வைத்திருக்கும் இந்தக் கால இடைவெளியை வைத்துப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வகைகளைக் கூறலாம்.

1. தினசரி வர்த்தகம்

2. ஸ்விங் டிரேடிங்

3. குறுகிய கால முதலீடு

4. நீண்டநாள் முதலீடு

தினசரி வர்த்தகம் என்பது இன்று காலை ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அன்றைய தினத்தின் வர்த்தகம் முடியும் நேரத்திற்குள் மீண்டும் அவற்றை விற்பது ஆகும். ஸ்விங் டிரேடிங் என்பது காலையில் வர்த்தகம் தொடங்கிய உடன் அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி பிறகு உடனே விற்பது ஆகும். குறுகிய கால முதலீடு என்பது இன்று ஒரு நிறுவனத்தின் பங்குகளை நீங்கள் வாங்கி வைத்துப் பிறகு ஒரு வாரமோ அல்லது 6 மாத காலத்தில் அவற்றை நீங்கள் விற்பது ஆகும். நீண்டநாள் முதலீடு என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை கணிசமாக உயரும்பொழுது சிறிது சிறிது பங்குகளாக நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு அவற்றை ஒரு வருடம், இரண்டு வருடம், பத்து வருடம் என்று அவற்றை நீங்கள் விற்காமல் வைத்திருந்து. பிறகு ஒரு பெரிய லாபம் கிடைத்தபின் விற்பதாகும். மேலும் பங்குச் சந்தைகளில் உள்ள வர்த்தக வகைகள்பற்றி அடுத்த பதிவில் தெளிவாகப் பார்க்கலாம்.

வர்த்தகத் தளங்களைக் கையாளுதல்:

நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவர் என்பதால் நீங்கள் தற்போதுதான் ஒரு ஸ்டாக் புரோக்கரிடம் டீமேட் கணக்கைத் தொடங்கி இருப்பீர்கள். எனவே அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் வர்த்தக தளங்களையும் மற்றும் சாப்ட்வேர்களையும் முதலில் கையாளத் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால் அவற்றைப் பயன்படுத்தி தான் நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கவோ அல்லது விற்கவோ முடியும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கைத் தேர்ந்தெடுக்கும்பொழுது அவற்றை நீங்கள் தினசரி வர்த்தகம் அல்லது நீண்டநாள் வர்த்தகம என்பதனை தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஸ்டாப் லாஸ் என்று சொல்லக்கூடிய, உங்களுக்கு இழப்பு அதிகம் ஏற்படாமல் தடுப்பதற்கான வழி முறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம். இவை அனைத்தும் அந்த வர்த்தக தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே நீங்கள் முதலில் அந்த வர்த்தக தளங்களை உங்களுக்கு ஏற்றது போல் கையாளுதல் வேண்டும். வர்த்தக தளங்கள் என்பது ஸ்டாக் புரோக்கர்களின் நிறுவனத்திற்கு ஏற்றார்போல் மாறுபடும்.

எந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்:

அடுத்தபடியாகப் பங்குச் சந்தைகளில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் உங்களுக்கான சரியான ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்பொழுது அவர்களின் முந்தைய கால லாப நஷ்டங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் மட்டும்தான் ஒரு நிறுவனத்தின் பங்கின் விலை ஏற அல்லது இறங்கக்கூடும். இதற்காக நீங்கள் எங்குப் போய் இதெல்லாம் தெரிந்து கொள்வது என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை. NSE india வலைத்தளத்திலும் மற்றும் மனிகன்ட்ரோல் போன்ற வலைதளங்களிலும் இவை இலவசமாக உங்களுக்குக் கிடைக்கிறது அவற்றைப் பெற்று நீங்கள் பயன் பெறலாம்.

ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்தவுடன் அடுத்தபடியாக நீங்கள் முன்பு சொன்னது போல் குறுகிய கால முதலீடு அல்லது நீண்ட கால முதலீடு என்பதனை முடிவு செய்யுங்கள். நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவர் என்பதன் காரணமாக நீங்கள் குறுகிய கால முதலீடு தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் தினசரி வர்த்தகத்தைத் தேர்வு செய்யும்பொழுது உங்களால் பங்குச்சந்தையை பற்றிப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கக்கூடும். அதனால் நீங்கள் குறுகிய கால முதலீட்டைத் தேர்வு செய்து, ஒரு சிறந்த நிறுவனத்தின் பங்குகளில் சிறிதுசிறிதாக முதலீடு செய்து வாருங்கள். ஒரு 6 மாத கால இடைவெளியில் அந்த நிறுவனத்தில் உங்களது முதலீடு சற்று கணிசமாக உயர்ந்து இருக்கும். இந்த இடைவெளியில் நீங்கள் பங்குச்சந்தையை பற்றிய முக்கியமான அம்சங்களையும் நீங்கள் கற்று தெரிந்திருக்க நேரம் கிடைத்திருக்கும்.

நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவர் என்பதனால் எடுத்தவுடனே நீங்கள் தினசரி வர்த்தகத்தில் நுழைந்து விடக் கூடாது. தினசரி வர்த்தகத்தில் உங்களுக்கு வருமானம் கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டியிருக்கும் இதனால் உங்களுக்கு ஆபத்தும் இருக்கக்கூடும். 

நீங்கள் குறுகிய கால முதலீட்டைத் தேர்வு செய்த காரணத்தினால், நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனமும், அடுத்த ஆறு மாதத்திற்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் மாதத்திற்கு பங்குச்சந்தைக்கு என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை ஒதுக்க முடியும் என்றால் அந்தப் பணத்திற்கு ஏற்றவாறு உங்களின் நிறுவனத்தின் தேர்வு இருக்க வேண்டும். உதாரணமாக உங்களால் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை ஒதுக்க முடியும் என்று வைத்துக்கொண்டால், நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 150 ரூபாய்க்கும் கீழே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த மாதங்களில் அந்தப் பங்கின் விலை அதிகமாகும்பொழுது தொடர்ந்து உங்களால் முதலீடு செய்துவர முடியும்.

இது போன்ற நிறுவனங்களை நீங்கள் தேர்வு செய்யும்பொழுது அடுத்த ஆறு மாதத்திற்குள் 150 ரூபாய் என்று இருந்த பங்கின் விலை 170, 180 ரூபாய் என்று அதிகரிக்கக்கூடும். குறுகிய கால முதலீடு முடிந்தவுடன் உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைத்திருக்கக்கூடும். அதற்குப் பின்பு உங்களுக்கு வேண்டிய தினசரி வர்த்தகம் அல்லது மற்ற வர்த்தக முறைகளை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

எதுவாக இருந்தாலும் நீங்கள் முறைப்படி பங்குச்சந்தையை பற்றித் தெரிந்து கொண்ட பிறகு உங்களின் முதலீடு தொடங்குவது சிறப்பாக அமையும். பங்குச் சந்தையைப் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கும் மற்றும் நீங்கள் பங்குச்சந்தைக்கு புதியவராக இருப்பின் எவ்வாறு பங்குவர்த்தகம் செய்வது என்பது பற்றிய தகவல்களைப் பெற தமிழ் கேப்பிட்டல் உடன் இணைந்து இருங்கள்.

Post a Comment (0)
Previous Post Next Post