நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்எஸ்இ)

ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் என்றால் என்ன?

ஸ்டாக் மார்க்கெட்டில் முக்கியமானது பங்குப் பரிவர்த்தனை, இதைத் தனியாக எங்கும் செய்ய முடியாது, பங்கு சந்தையில் உள்ளபோது நிறுவங்கள் முதலில் இந்தியாவில் உள்ள ஒரு எக்ஸ்சேஞ்ச்ல் இடம் பெற வேண்டும், பிறகு அதில் வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யத் தொடங்குவார்கள். எந்த ஒரு ஸ்டாக் எக்ஸ்சேஞ்சாக இருந்தாலும் அதில் ஆயிரக்கனக்கான நிறுவங்கள் இருக்கும், அந்த ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் அரசு அங்கீகாரம் பெற்றா ஸ்டாக் தரகர்கள் இணைத்திருப்பார்கள், இவர்கள்மூலம் அந்த ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இருக்கும் பங்குகளை நாம் வாங்கலாம் மற்றும் விற்கவும் செய்யலாம். அனைத்து பங்குபற்றிய தகவல்களும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் கொடுக்கப்பட்டு இருக்கும்.

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா:

தேசிய பங்குப் பரிவர்த்தனை வாரியம் என்றும் கூறலாம். இதனை அனைவரும் சுருக்கமாக(NSE - என்எஸ்இ) என்று  அழைப்பார்கள்.

இந்தியாவில் மிக முக்கியமான பங்குப் பரிவர்த்தனைகள் ஓன்று நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா, தமிழில் தேசிய பங்குப் பரிவர்த்தனை வாரியம் என்றும் கூறலாம். இதனை அனைவரும் சுருக்கமாக(NSE – என்எஸ்இ) என்று  அழைப்பார்கள். 1992ஆம் ஆண்டு முதல் அனைவராலும் பயன்படுத்தப்படும் பரிவர்த்தனை வாரியமாக மாறிவிட்டது. இது தான் இந்தியாவில் உள்ள சிறந்த பங்குப் பரிவர்த்தனை வாரியம். ஆரம்பத்தில் காகித பரிமாற்றங்களைத் தொடக்கி தற்போது மின்னணு வர்த்தகம்வரை சிறப்பாகச் செய்படுவதால் உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

உலக அளவில் நான்காவது இடம்:

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா(NSE) உலக அளவில் நான்காவது மிகப் பெரிய சந்தையாகவும், இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாகவும் இன்றளவும் இருக்கிறது. மின்னணு மூலம் அதிக வர்த்தகம் செய்வதில் இந்தியாவில் முதன்மையாக விளங்குகிறது. இந்தியாவில் இரண்டாவது இடத்தில இருப்பது மும்பை பங்குச் சந்தை ஆகும்.

இந்தியாவின் பங்குகள் மற்றும் கடன்கள் வர்த்தகம் செய்வதில் முன்னோடியாகவும் இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய குறியீடான NIFT50 கண்காணிப்பது NSE(தேசிய பங்கு சந்தையின்) வேலையாகும். NIFT50 என்பது இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றம் தன்மையைப் பெற்றுருக்கிறது.

 2.27 டிரில்லியன் டாலர்களைக் குவித்தது:

மேலும் இந்தியாவில் முதன் முதலில் மின்னணு வர்தகத்தினை அறிமுகம் செய்து தற்போது வரை இணையதளம் வாயிலாக அதிகம் வர்த்தகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2020 கணக்கெடுப்பின் படி நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா மொத்த சந்தை மூலதனத்தில் 2.27 டிரில்லியன் டாலர்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

NIFT 50

நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா பரிவர்த்தனையில் முதன்மையானது NIFT 50 என்ற index(குறியீடு). இது இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றக்கூடிய 12 துறைகளில் உள்ள 50 முக்கியமான நிறுவனங்களின் பங்குகளை ஒன்றிணைத்து NIFT 50 என்ற குறியீட்டை உருவாக்கி உள்ளார்கள்.

தெரிந்து கொள்: பங்கு சந்தை அடிப்படை தகவல்கள்

முடிவுரை :

இந்திய முதலீட்டாளர்களுக்குப் பயத்தை குறைத்து நம்பிக்கையை உயர்த்துகிறது. இந்தியாவில் உள்ள 12 முக்கியமான துறைகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை எளிதாக வர்த்தகம் செய்துகொள்ள முடியும். இங்கு நாணய வர்த்தகம் கூடச் செத்துக்கொள்ளலாம். நீங்கள் இந்திய அரசு அங்கீகாரம் பெற்றுள்ள எந்த ஒரு stock brokers கணக்கு வைத்திருந்தாலும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்எஸ்இ)-ல் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகளில் வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.

Post a Comment (0)
Previous Post Next Post